செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு தங்களுக்கு ஏற்படும் நோய்(பிணி)களை போக்குவதற்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான புறநோயாளிகள் வந்து செல்கின்றனர.
அவ்வறு மருத்துவமனைக்கு வரும் புற நோயாளிகள் பதிவு சீட்டு வாங்குதல், மருத்துவரை அணுகுதல், மருந்துகள் வாங்குதல் என நீண்ட நேரம் மருத்துவம்னையில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்களுக்கு இயற்கை உபாதை கழிக்கும் சூழல் ஏற்படுகிறது.
புறநோயாளிகள் கழிப்பறை பூட்டியே கிடப்பதால் புறநோயாளிகள் இயற்கை உபாதைகள் கழிக்க முடியாமல் கட்டுப்படுத்தும்பொழுது அவர்களுக்கு மந்த மயக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக மனம் குமுறலுடன் வேதனை தெரிவிக்கின்றனர்.
செஞ்சி அரசு பொது மருத்துவமனைக்கு நோய்கள் தீரும் என்று வரும் புற நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புறநோயாளிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக