மயிலம் சட்டமன்ற உறுப்பினர் ச. சிவக்குமார் இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி. பழனியை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.
மனுவில் அவர் கூறியுள்ளதாவது:-
விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் ஏப்ரல் 5, 2022 ம் ஆண்டு மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் சிப்காட் தொழில் பூங்கா அமைவதற்கு அடிக்கல் நாட்டினார். இதில் லோட்டஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்... நிறுவனம் துவக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு 90% பணிகள் முடிவடைந்து நிறுவனம் துவங்கும் நிலையில் உள்ளது.
இந்த நிறுவனத்தில் பணிபுரிவதற்கு அத்தொகுதி மக்களை பணியில் அமர்த்தாமல் வேறு தொகுதி மக்களை பணியில் அமர்த்த நிறுவனம் பரிந்துரை செய்து வருகிறது. இத்(மைலம்)தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் எனது தொகுதி மக்களுக்கு தகுதியின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பலமுறை கூறியும் இன்று வரை ஒருவரையும் நியமனம் செய்யவில்லை, எனவே தொகுதி மக்களுக்கு முன்னுரிமை அளித்து தகுதியின் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக