தமிழ்நாடு காவல்துறை 2010, காக்கும் கரங்கள் 15 வது பங்களிப்பாக மறைந்த காவலர் குடும்பத்திற்கு 12 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டது.
தமிழ்நாடு காவல்துறை 2010 பேட்ச் -ன் காக்கும் கரங்கள் 15 வது பங்களிப்பாக விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த முதல் நிலை காவலர் சீனிவாசன் 24 அக்டோபர் 2023 அன்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருடன் பணியில் சேர்ந்த 2010 பேட்ச் காவல் நண்பர்கள் ஒன்றிணைந்து சேகரித்த நிதி ரூபாய் 12,12,000/- தொகையினை தபால் அலுவலகத்தில் சீனிவாசன் மகள் ரோஷினி பெயரில் செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்கி ரூ. 6,06,000/- தொகையும், மகன் ரோஹித் பெயரில் செல்வமகன் சேமிப்பு கணக்கு தொடங்கி ரூ. 6,06,000/- தொகையையும் அஞ்சல் அட்டை மூலம் பதிவு செய்யப்பட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் அவர்கள் மூலம் மறைந்த சீனிவாசனுடைய மனைவியிடம் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக