தமிழ்நாடு பத்திரிக்கையாளர் நலச் சங்கம் சார்பில், திருச்சியில் நடைபெற்ற தேசிய பத்திரிக்கையாளர் தின விழா!

 

தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச் சங்கம் சார்பில் திருச்சியில் உள்ள தனியார் விடுதியில் தேசிய பத்திரிக்கையாளர் தின விழா கொண்டாடப்பட்டது. 

இவ்விழாவில் பத்திரிக்கையாளர்களுக்கு ரூபாய் 1 லட்சம் விபத்துக்கான காப்பீடு, பாராட்டு சான்றிதழ், பத்திரிகையாளர் நலன் மற்றும் பாதுகாப்பு கருத்தரங்கம், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் கௌரவிப்பு போன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார் பொதுச்செயலாளர் சத்திய நாராயணன் வரவேற்று பேசினார் அரசு தலைமை கொறடா கோவை செழியன் பங்கேற்று பத்திரிக்கையாளர்களுக்கு விருது வழங்கி பாராட்டினார்.

மேலும் விழாவில் மாநிலத் தலைவர் சரவணனுக்கு மதுரை மாவட்ட தலைவர் கணேஷ் செயலாளர் ரவிச்சந்திர பாண்டியன், இணைச்செயலாளர் பாண்டியன், துணை தலைவர் பாலா, செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ் மற்றும் கார்த்திக் உட்பட ஏராளமான நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் அமுதம் ரிப்போர்ட்டர் ஆசிரியரும், நிறுவனருமான முனைவர் வாஞ்சிநாதன், மெட்ரோமேன் பத்திரிகையின் ஆசிரியரும், நிறுவனமான எஸ். அன்பு மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் செய்தியாளர்கள் பங்கேற்றனர்.விழா முடிவில் பொருளாளர் காமேஷ் கண்ணன் நன்றியுரை வழங்கினார்.

Post a Comment

புதியது பழையவை