அன்னமாக காட்சியளித்த காசி விசுவநாதர்! சித்தர்கள் வழிபட்ட மிக பழமை வாய்ந்த ஆலய திருப்பணிக்கான சிறப்பு வழிபாடு!!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுகடம்பூர், செஞ்சியின் ஈசான்ய மூலையில் அமைந்துள்ள சித்தர்களால் வழிபாடு செய்த மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் ஆலயத்தில் ஆலய திருப்பணி நடைபெறவேண்டி 21 நாட்களுக்கு 21 வகையான சிறப்பு பூசைகள் நடைபெருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பூசைகள் என பூசை பொருட்கள் 77 கிலோ என்ற நிலையில் தினமும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நவம்பர் 27, திங்கள் அன்று 7-ம் நாள் பூசையாக 77 கிலோ அரிசியினால் அன்னம் செய்து காசிவிசுவநாதருக்கு அன்னாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் காசி விசுவநாதர் முழுவதும் அன்னமாக பக்தர்களுக்கு காட்சியளித்தார். இவ்விசேச பூசையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னவடிவ அய்யனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து  அனைவருக்கும் அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

செய்தியாளர்:                              மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை