நல்லாண் பிள்ளை பெற்றால் காவல் நிலையம் சார்பாக, பள்ளி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் நல்லாண் பிள்ளை பெற்றால் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று நல்லாண் பிள்ளை பெற்றால் காவல் நிலையம் சார்பாக காவல் உதவி ஆய்வாளர் சையத்முகமதுஅலி தலைமையில் பள்ளி தலைமை ஆசிரியர் பிரபாகரன் முன்னிலையில் மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள், புகையிலை மற்றும் நல் தொடு உணர்வு(GOOD TOUCH), தீய தொடு உணர்வு(BAD TOUCH) பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு உதவி ஆய்வாளர் வெங்கடேசன், தலைமை காவலர் ஜோஸ் ஆனந்த், பெண் முதல் நிலை காவலர் சசிகலா, மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:                              மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை