விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மண்பாண்ட (குலாலர்) சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் விவசாயிகள், நெசவாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு பொதுமக்களுக்கு வழங்குவதற்கு கரும்பு, அரிசி, வெல்லம், வேட்டி, சேலைகள் கொள்முதல் செய்வது போன்று, மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேலோங்கிட பொங்கல் பண்டிகையில் ஒரு மண்பானையும், ஒரு மண் அடுப்பும் கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மண்பாண்ட(குலாலர்) சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜயனார் தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 200 -க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக