செஞ்சி இராஜாதேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாசு மற்றும் விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜா தேசிங்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமை படை மற்றும் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் மாசு மற்றும் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் கணபதி தலைமையில் நடைபெற்றது.

தேசிய பசுமை படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன் அனைவரையும் வரவேற்றார். திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலர் சிவசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். சுற்றுச்சூழல் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நாகமுத்து வாழ்த்துரை வழங்கினார். 

விழுப்புரம் மாவட்ட பசுமை தோழி பவித்ரா மாசில்லா தீபாவளியை கொண்டாடுவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் மாணவர்கள் கலை நிகழ்ச்சி நிகழ்த்தினர். சிவநாதன் நன்றியுரை  வழங்கினார். நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:                             மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை