விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம் செவலபுரை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்தது கட்டிடத்தை பள்ளியின் (1991 - 1992) முன்னாள் மாணவர்கள் சார்பில் வண்ணம் அடித்து மாணவர்களுக்கு பயனளிக்கும் வகையில் சுவற்றில் திருக்குறள் எழுதப்பட்டு சீரமைக்கப்பட்டது. இந்நற்செயலை பாராட்டும் வகையில் பள்ளியை சீரமைத்த (1991 - 1992) முன்னாள் மாணவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா இன்று நடைபெற்றது.
விழாவில் உதவி தலைமை ஆசிரியர் லக்ஷ்மி நாராயணன் அனைவரையும் வரவேற்றார், தலைமை ஆசிரியர் நந்த கோபாலகிருஷ்ணன் தலைமையேற்று (1991-1992) முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டுளைத்தெரிவித்தார். விழாவில் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா ஜெய்சங்கர், பெற்றோர் சங்க தலைவர் சிவகுமார், மருத்துவர் தன்மானன், ஆசிரியர்கள் முத்துக்குமரன், சரவணன், சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஊராட்சி மன்ற உறுப்பினர் பூண்டிசங்கர் முன்னாள் மாணவர்களின் ஒருங்கிணைப்பாளர்கள் சாக்ரடீஸ், கிருஷ்ணன் இவர்களுக்கு கதராடை அணிவித்து கௌரவித்தார். விழாவிற்கு ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தமிழ்த்திரு நா.முனுசாமி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
முன்னாள் மாணவர்கள் செல்வம், நடராசன், இளையராஜா, கண்ணன், சங்கர், தமயந்தி, வாசுகி, தணலட்சுமி, ஆகியோர் ஒருங்கிணைந்து கல்விக் கண் திறந்த காமராசர், தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட திருவுருவ படங்கள் மற்றும் 3 சுவர் கடிகாரங்களை பள்ளிக்காக தலைமை ஆசிரியரிடம் வழங்கினர். விழாவில் இருபால் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். சின்னதுரை நன்றியுரை வழங்கினார்.
செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக