நீலகிரி மாவட்ட அதிமுக சார்பில் மிக்ஜாம் புயலால் சென்னையில் மழை நீரில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எஸ்பி வேலுமணி வழிகாட்டுதலின்படி நீலகிரி மாவட்ட கழக செயலாளர் வினோத் ஏற்பாட்டில் இன்று நீலகிரி மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு காய்கறிகள் மற்றும் தேயிலை தூள்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் கழக அமைப்பு செயலாளர் அர்ஜுணன், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் பாலநந்தகுமார், MGR மன்ற மாநில துணை செயலாளர் லட்சுமணன், மாவட்ட கழக துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், உதகை நகர செயலாளர் சண்முகம், ஒன்றிய செயலாளர்கள் பெள்ளி, குமார், குந்தா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
கருத்துரையிடுக