செஞ்சி நகர அதிமுக சார்பில் தெருமுனைப் பிரச்சாரக் பொதுக்கூட்டம்! முன்னாள் அமைச்சர் சிறப்புரை!!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில், செஞ்சி நகர அதிமுக சார்பில், நகர செயலாளர் வெங்கடேசன் தலைமையில், நகர அம்மா பேரவை செயலாளர் திருமலை முன்னிலையில், மக்கள் விரோத திமுக ஆட்சியை கண்டித்து செஞ்சி காந்தி பஜாரில் தெருமுனைப் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரச்சாரக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் கழக இலக்கிய அணி செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைசெல்வன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

நிகழ்ச்சியில் முன்னால் மத்திய இணை அமைச்சர் N. ராமச்சந்திரன், மாவட்ட அவைத்தலைவர் கு. கண்ணன், முன்னால் நகர செயலாளர் பிரத்திவ்ராஜ் மற்றும் மணிமாறன், விஜயன், ராஜேந்திரன் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் 8 வது வார்டு செயளாளர் பண்ணீர்செல்வம் நன்றியுரை வழங்கினார்.

செய்தியாளர்:                               மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை