விக்கிரவாண்டி ஒன்றியத்தில் இல்லம் தேடி கல்வித் திட்ட மையங்களை தீடீர் பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்.

 

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியம், பனையபுரம், ஊராட்சியில் நடைபெற்று வரும் இல்லம் தேடி கல்வி மையம் மற்றும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் சி.பழனி இ.ஆ.ப., மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் ஆகியோர் மையங்களை ஆய்வு செய்து தன்னார்வலர்களுக்கும், மாணவர்களுக்கும் ஆலோசனைகளை வழங்கினர். மேலும் மாணவர்களுக்கு ஆங்கில எழுத்து அட்டைகள் கொடுத்து படிக்க வைத்து அதற்கான விளக்கங்களை கேட்டறிந்தனர் இதில் உரிய முறையில் பதில் கூறிய மாணவர்களை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இல்லம் தேடி கல்வி மையம் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடைந்து மூன்றாம் ஆண்டில் நாம் கால் பதித்திருக்கிறோம், மேலும் அனைத்து மாணவர்களும், தன்னார்வலர்களும் அனுதினமும் வரவேண்டும் என்று ஊக்கம் கொடுத்து தன்னார்வலர்களுக்கும், மாணவர்களுக்கும் கற்றல், கற்பித்தல் சார்ந்த தகவல்களை விளக்கி கூறினர். 

விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது பணிபுரியும் தன்னார்வலர்களின் எண்ணிக்கை 7142 எனவும், இதில் இல்லம் தேடி கல்வியில் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயிலுகின்ற மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 1,29,090.மாணவர்கள் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் உதவி திட்ட அலுவலர் தனவேல், வட்டார கல்வி அலுவலர் ஜெயசங்கர், பள்ளி தலைமை ஆசிரியர் உமா, ஆசிரியர் பயிற்றுனர் ஆனி, புதிய பாரத எழுத்தறிவு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தமிழழகன், கமலக்கண்ணன், ஆசிரியர்கள் தெய்வசிகாமணி, சந்திரலேகா, செல்வி, சசிகலா, ஷகிலா மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:                               மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை