செஞ்சி ஏபில் மழலையர் பள்ளிக்கு தொண்டு நிறுவனங்கள் சார்பில், 4 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் அடிப்படை வசதிகள் உட்பட புதிய கட்டிடம்!

 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வெள்ளக்குளம் ஏபில் மழலையர் பள்ளியில், சென்னை அறம் பொருள் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பிரசன்னாகாந்தி அவர்களின் சீரிய முயற்சியால், எஸ்டாட்காம் மற்றும் ஏகம் USA நிறுவனங்களின் நிதியுதவியுடன், ரூபாய் 4,49,500/- மதிப்பீட்டில், 

சுத்திகரிகப்பட்ட குடிநீர், நீர் மோட்டாருடன் ஆழ்துளை கிணரு, குடிநீர் அறை, நீர்த்துதேக்க தொட்டி, 4 கழிப்பறை, 2 சீறுநீர் கழிப்பறை மற்றும் மின்சார வசதியுடன் கூடிய மூன்று அறைகளை கொண்ட கட்டிடத்தினை இன்று செஞ்சி வெள்ளக்குளம் ஏபில் மழலையர் பள்ளி குழந்தைகளின் பயன்பாட்டிற்காக, சென்னை அறம் பொருள் தொண்டு நிறுவனத்தின் மேளாளர் ஸ்ரீநாத் அவர்கள் கலந்து கொண்டு மழலையர் பள்ளி குழந்தைகளுடன் இணைந்து திறந்து வைத்தார்.

நிகழ்வில் ஏபில் மழலையர் பள்ளி மேலாளர் ஜான் வில்லியம்ஸ், ஆசிரியைகள் எ. வள்ளி, கவுசல்யா, சத்யா, K. வள்ளி மற்றும் வெள்ளக்குளம் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர்:               மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை