Top News

விழுப்புரம் மாவட்டம் வரலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் காணும் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்தனர்.

பொங்கலை பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் சுற்றுலா தலமான வாலாற்று சிறப்புமிக்க செஞ்சிக்கோட்டைக்கு இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துன் வந்து காணும் பொங்கலான உழவர் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். 

இங்கு ராஜகிரி கோட்டை, ராணி கோட்டை எனும் கிருஷ்ணகிரி கோட்டையில் கல்யாண மஹால், அகழாய்வு செய்யப்பட்ட அரண்மனை வளாகம், குதிரைலாயம், யானைகுளம், உடற்பயிற்சி கூடம், வெடிமருந்து கிடங்கு, நெற்களஞ்சியம், ஆயிரங்கால் மண்டபம், பூங்கா, அரண்மனை மாளிகை போன்ற எண்ணற்ற இடங்கள் உள்ளன.

உழவர் திருநாளான இன்று மட்டும் 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10165 நபர்கள் இதில் வெளிநாட்டவர்கள் 5 பேர், சிறார்கள் சுமார் 4000 நபர்கள் கோட்டையின் உள்ளே ஓடியாடி விளையாடுவதும், இளைப்பாறுவதும், புகைப்படங்கள் எடுத்தும் உழவர் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர்.

பொதுமக்களின் பாதுகாப்பு கருதி அசம்பாவிதங்கள் நேராவண்ணம் பாதுகாக்க செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் கவினா தலைமையில் ஆய்வாளர் பார்த்தசாரதி மேற்பர்வையில் 110 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

செஞ்சி போக்குவரத்து கழகம் பேருந்து நிலையத்தில் இருந்து கேட்டைக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. தொல்லியல் துறையினர் மருத்துவ உதவி மற்றும் தீயணைப்பு துறை போன்ற முன்னேற்பாடுகள் செய்திருந்தனர்.

குறிப்பு: ராணி கோட்டை எனும் கிருஷ்ணகிரி கோட்டையில் இயற்கை உபாதை கழிப்பதற்கு என எவ்வித இடமும் இல்லாததால் ஆண்களே சிரமத்தை சந்திக்கின்றனர் இந்நிலையில் பெண்களின் நிலை மிகவும் கடினமாக உள்ளது இதற்கான தீர்வினை துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என சுற்றுலா பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.

மாவட்ட செய்தியாளர்:              மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை