செஞ்சியில் ஜெயலலிதா 76-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் ன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்துகொண்டு 760 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா 76-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, எம்.ஜி.ஆர் இளைஞர் அணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பிரித்விராஜ் தலைமையில், விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு 760 பேருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, சோழன், புண்ணியமூர்த்தி, விநாயகமூர்த்தி, நடராஜன், மாவட்ட இணை செயலாளர் ஆனந்தி அண்ணாதுரை, கவுன்சிலர்கள் அகல்யா வேலு, டிங்கர் துரை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக