செஞ்சி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் இன்று தாய் சேய் நலக் கட்டடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தம்நாடு அரசு மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் விழுப்புரம் மாவட்டம் சார்பில் செஞ்சி அரசு பொது மருத்துவமனை வளாகதில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் தாய் சேய் நலக் கட்டடம் கட்டும் பணி
மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் திண்டிவனம் பகுதியில் மின்கசிவு விபத்தில் இறந்த சிறுவனின் குடும்பத்திற்கும், செஞ்சி அடுத்த கப்பை கிராமத்தின் சாலையோர கிணற்றில் ஆட்டோ விழுந்த விபத்தில் இறந்த சிறுவர்கள் குடும்பத்தினருக்கும் முதலமைச்சரின் நிவாரண நிதியான தலா 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் பழனி முன்னிலையில் அமைச்சர் மஸ்தான் குழந்தையின் பெற்றோர்களிடம் வழங்கினார்.
நிகழ்வில் ஒன்றிய குழு பெருந்தலைவர்கள் செஞ்சி விஜயகுமார், வல்லம் அமுதா ரவிக்குமார், பொதுப்பணி துறை அலுவலர் பருதி, மவட்ட மருத்துவ இணை இயக்குநர் டாக்டர் இலட்சுமணன், வருவாய் வட்டாட்சியர் ஏழுமலை, செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி, பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர்கள், செஞ்சி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாலகோபால் மற்றும் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக