விழுப்புரத்தில் 100% வாக்கு! திருநங்கைகளுக்கு ஆட்சியர் விழிப்புணர்வு!!

 

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக நுழைவாயில் அருகில் 2024-நாடாளுமன்ற தேர்தல் முன்னிட்டு இன்று (25.03.2024) சமூக நலத்துறை சார்பில், தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா 100 சதவீதம் வாக்களிப்போம் என்று திருநங்கையர்களுக்கான தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான டாக்டர் சி.பழனி தொடங்கி வைத்து திருநங்கைகள் கைகளில் 100 சதவீதம் வாக்களிப்போம் என்ற வாசகம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். உடன் மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பார்கவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை