செஞ்சியில், 13 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி! அமைச்சர் மஸ்தான் அடிக்கல் நாட்டினார்!!

செஞ்சியில் 13 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிட்டாம்பூண்டியில் விழுப்புரம் மாவட்ட உயர் கல்வித்துறை சார்பில் செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் கலந்து கொண்டு ரூ.1371 லட்சம் மதிப்பீட்டிலான அரசு கல்லூரி கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மேலும் கல்லூரியின் கட்டிடத்தின் மாதிரி வரைபடத்தினையும் அவர் வெளியிட்டார்.


நிகழ்ச்சியில் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷூ நிகம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் அரங்க ஏழுமலை, செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் அலி, கல்லூரி முதல்வர் டாக்டர் லலிதா, செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் கவினா, செஞ்சி வருவாய் வட்டாட்சியர் ஏழுமலை, உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ், ஒன்றிய கவுன்சிலர் பணிமலர் ராஜாராம், ஊராட்சி மன்ற தலைவர் பச்சையப்பன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை