சிங்கவரம் அரங்கநாதர் திருக்கோவிலில் 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உணவருந்தும் கூடம் அமைச்சர் திறந்து வைத்தார்!


சிங்கவரம் அரங்கநாதர் திருக்கோவிலில் 2 கோடியே 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உணவருந்தும் கூடம் திறப்பு விழா நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிங்கவரம் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்லவர் கால குடைவரை கோவிலான அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி திருக்கோவில் ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் அரங்கநாத சுவாமி உணவு அருந்தும் மண்டபம், ரூ.73 லட்சம் மதிப்பீட்டில் அரங்கநாயகி தாயார் உணவு அருந்தும் மண்டபம், ரூ. 71.80 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார வளாகம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி. பழனி தலைமையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ். மஸ்தான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷூ நிகம், செஞ்சி ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், மாவட்ட ஒன்றிய குழு உறுப்பினர் அரங்க ஏழுமலை, செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவர் மொக்தியார் அலி, ஒன்றிய கவுன்சிலர் சென்பகப்பிரியா விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் பராசக்தி தண்டபாணி, செஞ்சி வருவாய் வட்டாட்சியர் ஏழுமலை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்/ செயல் அலுவலர் ஜீவானந்தம், ஆய்வாளர்/தக்கர் சங்கீதா, விழுப்புரம் உதவி பொறியாளர் ராகவன், கணக்காளர் இளங்கீர்த்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை