சத்தியமங்கலம் அரசு பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம்! முதன்மை கல்வி அலுவலர் வாழ்த்து!!

 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் கல்வி மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி 9ஆம் வகுப்பு மாணவி லித்திஷா சென்னையில் மாநில அளவில் நடைபெற்ற சிறார் திரைப்படத்திற்கான பிரிவில் சிறந்த திரைக்கதைக்கான போட்டியில் மாநில அளவில் முதலிடம் பெற்றார்.

மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை விழுப்புரம் முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார.

உடன் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் (மேல்நிலை), பெருமாள் (இடைநிலை), முதன்மை கல்வி அலுவலக பள்ளி துணை ஆய்வாளர் ராமதாஸ், திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலக பள்ளி துணை ஆய்வாளர் விநாயகமூர்த்தி மற்றும் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் திலீப் ஆகியோர் உடன் இருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை