விழுப்புரத்தில் புதிய நடைபயிற்சி பூங்கா! ஆட்சியர் திறந்து வைத்தார்!!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நடைபயிற்சி பூங்காவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை இரவிக்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், சட்டமன்ற உறுப்பினர்கள் விழுப்புரம் டாக்டர் இரா. இலட்சுமணன், விக்கிரவாண்டி நா. புகழேந்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகராட்சி ஆணையர் இரமேஷ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் ஷீலா தேவி சேரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை