செஞ்சியில் சிவ ஆலயங்களில் மகா சிவராத்திரி ஆறு கால சிறப்பு பூஜைகள்! திரளான பக்தர்கள் சிவ தரிசனம்!!

செஞ்சியில் உள்ள சிவ ஆலயங்களில் வெள்ளிக்கிழமை மாசி மாத மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு செஞ்சி சிறுகடம்பூர் சித்தர்கள் வழிபாடு செய்த ஸ்ரீ காசிவிசாலாட்சி உடனுறை காசிவிசுவநாதர், கோட்டக்கரை மகாலிங்கேஸ்வரர்,

பீரங்கிமேடு அபிதகுஜலாம்பாள் உடனுறை அருணாச்சலேஸ்வரர், பெரியகரம் கைலாசநாதர், சக்கராபுரம் ஸ்ரீ காமாட்சி சமேத ஏகாம்பரேஸ்வரர் உள்ளிட்ட சிவ ஆலயங்களில் சிவபெருமானுக்கு ஆறு கால பூஜைகள் சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழாவில் இரவு முழுவதும் நடைபெற்ற ஆறு கால பூஜையில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர். மேலும் அனைத்து சிவ ஆலயங்களிலும் அன்னதான குழுக்களால் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை