விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பெரியகரம் காந்தி பஜாரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் 14 ஏப்ரல் 2024 ஞாயிற்றுக்கிழமை சித்திரை திங்கள் முதல் நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 77-ம் ஆண்டு இலட்சதீப திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இலட்சதீப திருவிழாவை முன்னிட்டு காலை மூலவர் செல்வ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனையும், மாலை 6 மணியளவில் இலட்சதீபங்களுடன் மகா தீப ஆராதனையும் நடைபெற்றது. இலட்சதீப திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி வழிபட்டனர்.
விழாவில் அனைவருக்கும் ஐய்யப்ப சேவா சங்கம் மற்றும் பெரியகரம் இளைஞர்கள் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மங்கள நாதஸ்வர மேளம் இசைக்க வானவேடிக்கையுடன் முத்து பல்லக்கில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக