2024 ஏப்ரல் 19 -ல் நடைபெறவுள்ள 18 வது மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் மற்றும் திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகங்களில் 13.விழுப்புரம் (தனி) தொகுதி மக்களவை தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள விழுப்புரம், திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்குகளுக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்
வேட்பாளர்களின் பெயர், சின்னம் மற்றும் புகைப்படங்கள் அடங்கிய Ballot Sheet மற்றும் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் கருவியில், வாக்காளர் வாக்குப்பதிவு செய்த சின்னத்திற்கான உறுதிச்சீட்டு பொருத்தும் பணிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்று வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி இன்று (10.04.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் விழுப்புரத்தில் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, வருவாய் வட்டாட்சியர் வசந்தகிருஷ்ணன், திண்டிவனத்தில் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், மரக்காணம் வருவாய் வட்டாட்சியர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக