விழுப்புரம்: மாவட்டத்தில் அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் சுத்தம் செய்ய, கீழ் நிலை அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுரை!

 

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் உள்ள 3972 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை நாளை 15.05.2024 அன்று ஒட்டுமொத்தமாக தூய்மை செய்திடவும் (Mass Cleaning) அதனைத் தொடர்ந்து 15 நாட்களுக்கு ஒருமுறை தூய்மை செய்திடவும், 

ஒவ்வொரு முறையும் நீரேற்றம் செய்யும்போது குளோரினேஷன் செய்திடவும் 13.05.2024 அன்று மாவட்ட அளவில் குடிநீர் பணிகள் ஆய்வு தொடர்பாக நடைபெற்ற மாவட்ட குடிநீர் மேலாண்மை குழு கூட்டத்தில் கீழ் நிலை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிகள் தொடர்பான அறிக்கையினை GPS புகைப்படத்துடன் சமர்ப்பித்திட மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை