நல்லான்பிள்ளைபெற்றால்: அரசு பள்ளியில் பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகை!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம், நல்லான்பிள்ளைபெற்றால் அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் மற்றும் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் விஜயகுமார், சற்குணம் இவர்களின் ஏற்பாட்டில் 10, 12, ஆம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடம் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி தலைமை ஆசிரியர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதல், இரண்டு, மூன்றாம் இடங்கள் பிடித்த மாணவர்களுக்கு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் விஜயகுமார் ரூ.5000, ரூ.4000, ரூ.3000 ஊக்க தொகை வழங்கி சிறப்புரையாற்றினார். நிகழ்வில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மரு.கதிர்வேல், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை