மயிலம் திருமட வளாகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் நல சங்க அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் மயிலம் ஸ்ரீமத் சிவஞான பாலய இருபதாம் பட்ட சுவாமிகள் கலந்துக் கொண்டு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் சிவசுப்பிரமணியர் ஆலயத்தில் அமைந்துள்ள திருமட வளாகத்தில் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஒருங்கிணைந்த பத்திரிக்கையாளர்கள் நல சங்க அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மைலம் ஸ்ரீமத் சிவஞான பாலய 20-ம் பட்ட சுவாமிகள் கலந்துக் கொண்டு பத்திரிகையாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். சிறப்புரையில் அவர் பத்திரிக்கையாளர்கள் பணி என்பது மிகவும் சிரமமானது என்றும், மேலும் குடும்பத்தாருடன் மகிழ்வான இடங்களுக்கு செல்ல முடியாத நிலை செய்தியாளர்களின் நிலை இருப்பினும் பத்திரிக்கையாளர்களின் சேவையை பொதுமக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என உரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் டி.சி. முருகன் வரவேற்புரையும், சங்கத்தின் கௌரவ தலைவர் மூத்த பத்திரிகையாளர் தங்கவேலப்பன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் சங்கத்தின் செயலாளர் சுரேஷ், டி.யூ.ஜே மாவட்ட செயலாளர் பார்த்தசாரதி, சங்கத்தின் துணைத் தலைவர் முல்லை குமார் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
நிகழ்வில் செயற்குழு உறுப்பினர்கள் ஜெயச்சந்திரன், வெங்கடேச சராவ் மற்றும் சங்க நிர்வாகிகள் சங்கர், தாண்டவமூர்த்தி, ரவி, வீடியோ சண்முகம், சுதா மணி, சையத் ரபி, பூபாலன், சண்முகம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக