சிங்கவரம் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ அரங்கநாதர் ஆலயத்தில் திருத்தேரோட்டம்! ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம்!!

 

செஞ்சி அடுத்த சிங்காரம் மலை மீது அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் திருத்தேரோட்டம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வடம் பிடிக்க வெகு விமர்சையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிங்கவரம் மலை மீது அமைந்துள்ள பல்லவர் கால குடைவரை கோவிலான அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும். 

அதன்படி இவ்வாண்டு கடந்த ஜூன் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து இரண்டாம் நாள் விழாவில் சிம்ம வாகனத்திலும், 3, 4 -ம் நாள் அனுமன், சேஷம் என ஒவ்வொரு நாளும் ஒரு வாகனத்திலும், 5 -ம் நாள் வியாழக்கிழமை பெரிய திருவடி எனும் கருட வாகனத்திலும், 6 -ம் நாள் யானை வாகனத்திலும் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 7 -ம் நாள் ஜூன் 8 சனிக்கிழமை இன்று விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு காலை மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேக ஆராதனையும், தொடர்ந்து உற்சவ மூர்த்தி ஸ்ரீதேவி பூதேவி சமேத அரங்கநாதருக்கு பல்வேறு வகையான மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்ட 

திருத்தேரில் எழுந்தருள மங்கள மேள தாளங்கள் சென்ட மேளம் இசைக்க வான வேடிக்கையுன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிந்தா கோவிந்தா கரகோஷத்துடன் தேரினை வடம் பிடித்து இழுக்க திருத்தேர் மாட வீதிகள் வழியாக சென்று தேர் நிலையை அடைந்தது.

தேரோட்டத்தில் பக்தர்கள் தங்கள் விளைநிலங்களில் விளைவித்த விளைபொருட்களை தேர் மீது வீசி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை