செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் அருகே ஆவின் பால் பவுடர் வாகனம் மீது மது ஏற்றி வந்த சரக்கு வாகனம் மோதி விபத்து.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் அருகே செஞ்சி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் செங்கத்திலிருந்து விழுப்புரம் நோக்கி ஆவின் பால் பவுடர் ஏற்றி வந்த வாகனம் சத்தியமங்கலம் அருகே சாலையோரம் நின்றிருந்த பொழுது மகாராஷ்டிராவில் இருந்து புதுச்சேரிக்கு மது ஏற்றி வந்த சரக்கு வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த வாகனத்தின் மீது மோதியதில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக விபத்தில் எவ்வித உயிர்ச்சேதமும் இல்லை. தகவல் அறிந்து விரைந்து வந்த சத்தியமங்கலம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: மதியழகன்.
கருத்துரையிடுக