செஞ்சி: தேவர் பேரவை சார்பில், 11 ஆம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழா!

 

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 117 வது பிறந்தநாள் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் செஞ்சி நகர தேவர் பேரவை சார்பில் இன்று (அக்.30) நடைபெற்ற 11 ஆம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவில் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து இனிப்பு வழங்கப்பட்டது. இதில் பேரவை நிர்வாகிகள் ஜெயராஜ், தெய்வம், தவமணி, பால்பாண்டியன், முத்துப்பாண்டியன், சசிகுமார், காளி சுப்பிரமணி, X-கவுன்சிலர் பத்மநாபன், A.C.சண்முகம், கலியபெருமாள், அண்ணாதுரை, சீனுவாசன் மற்றும் இளைஞர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை