திருவெண்ணெய்நல்லூர்: துலுக்கம்பாளையத்தில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது! 35 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்!!

திருவெண்ணெய்நல்லூர் அருகே துலுக்கம்பாளையத்தில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து 35 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்தனர் திருவெண்ணெய்நல்லூர் காவல் துறையினர்.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட துலுக்கம்பாளையம் கிராமத்தில் திருவெண்ணைநல்லூர் காவல் ஆய்வாளர் மைக்கேல் இருதயராஜ், உதவி ஆய்வாளர்கள் பாலசிங்கம், விவேகானந்தன் மற்றும் காவலர்கள் தலைமையில் (அக்.17) அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்கள் சம்பந்தமாக ரோந்து பணியில் ஈடுபட்ட போது துலுக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த முரளி என்பவர் பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதை அடுத்து விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுக்கா துலுக்கம்பாளையத்தைச் சேர்ந்த முரளி, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா M. குன்னத்தூரை சேர்ந்த முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 35 கிலோ அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் குட்கா பொருள்கள் கைப்பற்றப்பட்டு இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை