இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சிங்கவரம் அரங்கநாதர் கோவிலில் 2 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் திருக்கோயில்களில் இலவச திருமணம் நடத்துதல் சட்டமன்ற அறிவிப்பு 2024 - 2025 அறிவிப்பு எண்:27 அறிவித்துள்ளபடி ஏழை எளியமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.60,000/- திட்ட செலவில் இலவச திருமணம்.
தமிழக முழுவதும் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் இன்று(அக்.21) ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு இடங்களில் இலவச திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது. சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 31 இலவச திருமணங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி வைத்தார். அதன்படி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிங்கவரம் கிராம மலைமீது அமைந்துள்ள அரங்கநாதர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் இரண்டு ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.
செஞ்சியை அடுத்த மேலச்சேரியை சேர்ந்த வெற்றி வேந்தன் - பேபி ஷாலினி, வடபாலை கிராமத்தை சேர்ந்த வசந்த் - சங்கீதா ஆகிய இரு ஜோடிகளுக்கும் இலவச திருமணம் கோவிலில் நடத்தி வைக்கப்பட்டு அவர்களுக்கு 4 கிராம் தங்கத்தாலி, கட்டில், மெத்தை, பீரோ உள்ளிட்ட ரூ 60 ஆயிரம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டன. இதன் விவரம்;
*திருமாங்கல்யம் 4 கிராம் தங்கம் ரூ.30,000.00
*மணமகன் ஆடை ரூ.1000.00
*மணமகள் ஆடை ரூ.2000.00
*திருமணத்திற்கு மணமகன், மணமகள் வீட்டார் 20 நபர்களுக்கு உணவு ரூ.2000.00
*பூ மாலை ரூ.1000.00
*பீரோ - 1; ரூ.7800.00
*கட்டில் -1; ரூ.7500.00
*மெத்தை ரூ.2200.00
*தலையணை -2; ரூ.180.00
*பாய் -1; ரூ.180.00
*கைக்கடிகாரம் -2; ரூ.1000.00
*மிக்ஸி -1; ரூ.1490.00
*பூஜைப்பொருட்கள் + பாத்திரங்கள் வகையறா ரூ.3640.00 ஆக மொத்தம் ரூபாய் 60,000.00 மதிப்பு.
நிகழ்ச்சியில் செஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயகுமார், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம், ஆய்வாளர் சங்கீதா, சிங்கவரம் அரங்கநாதர் கோவில் மேலாளர் இளங்கீர்த்தி மற்றும் மணமக்களின் பெற்றோர்கள் உறவினர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக