திருவஞ்சேரி தனியார் சட்டக் கல்லூரியில், அப்துல் கலாம் 93வது பிறந்த நாள் விழா! 93 நாட்டு மரக்கன்றுகளை நட்ட மாணவர்கள்!!

 

முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் 93 வது பிறந்த நாளை முன்னிட்டு சட்ட கல்லூரி மாணவர்கள் 93 நாட்டு மரங்களை நட்டு வைத்தனர். 

சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த திருவஞ்சேரியில் பாரத் சட்டக் கல்லூரியில் கல்லூரி முதல்வர் கோபால் தலைமையில், மாணவர்கள் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 93 வது பிறந்த நாள் விழா கொண்டாடினர். விழாவையொட்டி இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சார்பாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 

மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என்ற நோக்கத்தோடு கல்லூரியின் வளாகத்திற்குள்ளும், திருவஞ்சேரி பிரதான சாலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும கல்லூரி முதல்வர் கோபால் உட்பட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு 93 நாட்டு மரக்கன்றுகளை நட்டனர். நிகழ்வில் கல்லூரி  பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.

செய்தியாளர்:         ‌         தலைமை சந்திரசேகர்.

Post a Comment

புதியது பழையவை