விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி கிராமத்தில் மிராக்கில் டிரஸ்ட் சார்பில், மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து ஓசையில்லா தீபாவளி விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பறவைகள் மற்றும் வனவிலங்குகள் அச்சம் இன்றி வாழ ஓசையில்லா தீபாவளி விழா கொண்டாட விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. இதில் நிறுவனர் அம்புரோஸ், ஆலம்பூண்டி செயின்ட் ஜோசப் தேவாலய முதல் பங்குத் தந்தை அருட்பணி, அசோக்குமார் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக