சாலையில் ஏற்பட்ட பெரும் பள்ளம்! உயிர்சேதம் ஏற்படுமுன் நடவடிக்கை எடுக்குமா செம்பாக்கம் நகராட்சி..?

 

செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கம் நகராட்சி அருகில் தாம்பரம் - வேளச்சேரி செல்லும் பிரதான சாலையில், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 அடி ஆழமுள்ள பெரும் பள்ளம் உள்ளது. இதனால் அப்பகுதயினை மிகுந்த அச்சத்துடன் கடக்கின்றனர். இது குறித்து பல முறை செம்பாக்கம் நகராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகிறது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் பலர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இப்பகுதியில் பெரும் பாதிப்பு, உயிர்பலி ஏற்படும் முன் செம்பாக்கம் நகராட்சி விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

தலைமை செய்தியாளர்: சந்திரசேகர்.

Post a Comment

புதியது பழையவை