விழுப்புரம்: சமூக நீதி போராளிகளின் சிலை, ஆட்சியர் தலைமையில் அமைச்சர் பொன்முடி ஆய்வு!

 

விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில், இடஒதுக்கீடு போராட்டத்தில், துப்பாக்கிச்சூட்டில் உயிர்நீத்த 21 சமூக நீதி போராளிகளுக்கான மணிமண்டபத்தில், சமூக நீதி போராளிகளின் சிலை நிறுவப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி. பழனி தலைமையில் வனத்துறை அமைச்சர் க. பொன்முடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் விஸ்வநாதன், செயற்பொறியாளர், பொதுப்பணித்துறை செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை