இந்திய அரசியலமைப்பு சட்டம் (26. நவ. 1949) தோற்றுவித்த தினத்தை முன்னிட்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 75 வது ஆண்டு இன்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்கள் இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை இறையாண்மை பூண்ட சமதர்மம், சமயம் சார்பற்ற மக்களாட்சி குடியரசாக நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் அமைப்பதென உறுதிப் பூண்டுள்ளோம். இதன் மூலம் இந்தியாவின் அனைத்துக் குடிமக்களையும் பாதுகாப்போம் என வாசித்து உறுதிமொழி ஏயேற்றனர். இதில் மூத்த வழக்கறிஞர்கள் உள்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக