செஞ்சி: மக்களுக்கு கிடைக்காமல், கழிவு நீர் கால்வாயில் கலக்கும் குடிதண்ணீர்! குடிதண்ணீர் பிரச்சனையை தீர்க்க முயலாத செஞ்சி பேரூராட்சி நிர்வாகம்!!

 

செஞ்சி பேரூராட்சியில் பொது குடிநீர்குழாய் உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் கழிவுநீர் கால்வாயில் கலப்பதால் அப்பகுதி மக்கள் குடிநீரின்றி அவதி. 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் வசிக்கும் பொது மக்களுக்கு செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே பொது குடிநீர் குழாயில் குடிநீர் வழங்குகிறது. பொதுக் குழாயில் வழங்கப்படும் குடிதண்ணீர் வாரத்திற்கு ஒரு மறை மட்டுமே கிடைக்கிறது என்பதால் செஞ்சி பகுதி மக்கள் பொது குடிதண்ணீரை மீண்டும் வழங்கப்படும் வரை சேமித்து வைத்து அருந்தி வருகின்றனர்.

இந்த நிலையில் செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட வார்டு எண். 8, ரங்கசாமி தெரு 1ல்  பொது குடிநீர் குழாய் ஆனது உடைப்பு ஏற்பட்டு குடிதண்ணீர் வீணாக கழிவுநீர் கால்வாய் கலக்கிறது இதனால் அப்பகுதி மக்கள் குடிதண்ணீரின்றி அவதியுறுகின்றனர். இது குறித்து செஞ்சி பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடந்த அக்.31 அன்று பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் அளித்து ஒருவாரகாலமாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மீண்டும் இன்று குடிதண்ணீர் மக்களுக்கு கிடைக்காமல் கழிவுநீர் கால்வாயில் கலக்கிறது.

இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொது மக்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய குடிதண்ணீர் மாறாக கழிவுநீர் கால்வாய்க்கு வழங்கப்பட்டு வருகிறதோ என்ற எண்ணம் மக்களிடையே நிலவுகிறது. இனியாவது அப்பகுதி மக்களின் குடிதண்ணீர் பிரச்சினையை தீர்த்து செஞ்சி பேரூராட்சி நிர்வாகம் குடிதண்ணீர் வழங்குமா (அ) ....?

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை