விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, சத்தியமங்கலம், ஆலம்பூண்டியில், அணிலாடி உள்ளிட்ட பல பகுதிகளில் கிருஸ்தவர்களால் இன்று (நவ.02) கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.
உலகம் முழுவதும் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2 ஆம் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் உயிர் நீத்த தங்கள் முன்னோர்கள் மற்றும் இளையோர்கள் ஆன்மா தேவனின் திருவடியில் இளைப்பாறுதல் பெறவேண்டி அவர்களது கல்லறையில் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சத்தியமங்கலம் புனித அந்தோனியார் தேவாலய முதல் பங்குத்தந்தை எ. சிறில் தலைமையில், உயிரிழந்த தங்களது முன்னோர்கள் மற்றும் இளையோர்கள் ஆன்மா தேவனின் திருவடியில் இளைப்பாறுதல் பெறவேண்டி சத்தியமங்கலம் கல்லறை தோட்டத்தில் கல்லறையில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
மேலும், தேவாலய பங்குத்தந்தை சிறில், ரட்சகதாஸ், பாலசிங்கம் இவர்களால் கல்லறை தோட்டத்தில் கூட்டுத் திருப்பலி நடத்தப்பட்டது. தொடர்ந்து ஒவ்வொரு கல்லறைகளாக சென்று தீர்த்தம் தெளித்து தூப ஆராதனை காண்பித்து ஆசீர்வதிக்கப்பட்டது.
இதே நிகழ்வாக ஆலம்பூண்டியில் கல்லறை தினத்தை முன்னிட்டு, புனித ஜோசப் தேவாலயம் முதல் பங்குத்தந்தை அருட்பணி, அசோக்குமார் தலைமையில், ஆலம்பூண்டி கல்லறை தோட்டத்தில் உயிரிழந்த தங்களது முன்னோர்கள் மற்றும் இளையோர்கள் ஆன்மா தேவனின் திருவடியில் இளைப்பாறுதல் பெறவேண்டி உறவினர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.
இந்நிகழ்வுகளில் அருட் சகோதரிகள், இறைமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய முன்னோர்கள் மற்றும் இளையோர்களின் கல்லறையில் நின்று கண்ணீர் விட்டு ஜெபம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக