விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் திருவம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ குபேர விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு நவ.10 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், முதல் கால பூஜை, கலச பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடைபெற்றது.
இதனையடுத்து நவ.11 (ஐப்பசி-25), திங்கள் இன்று காலை 6 மணியளவில் மங்கள இசையுடன் கோ பூஜை, வேதபாராயணம், இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், நாடி சந்தானம், மாக பூர்ணாஹதி,மகா தீபாரதனையும், தொடர்ந்து யாகசாலையில் இருந்து புனிதநீர் கலச புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடர்ந்து மங்கள மேள வாத்தியம் இசைக்க பக்தர்களின் பக்தி கரகோஷத்துடன் கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது தொடர்ந்து மூலவர் குபேர விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இதனையடுத்து புனிதநீர் ஆனது பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டு மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில்
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகளை அனைத்து உபயதாரர்கள், விழா குழுவினர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக