விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் தாலுகா பகுதிகளில் தொடர் கனமழை பெய்துவருவதையொட்டி, கூனிமேடுக்குப்பம் புயல் பாதுகாப்பு மையத்தில், பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில், அரசு முதன்மைச் செயலாளர் /ஆணையர், போக்குவரத்துத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு முன்னிலையில், வனத்துறை அமைச்சர் க.பொன்முடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் செஞ்சி - கே.எஸ்.மஸ்தான், விழுப்புரம் - இரா.இலட்சுமணன், விக்கிரவாண்டி - அ.சிவா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் தயாளன் உட்பட பலர் உடனிருந்தனர்.

Post a Comment

புதியது பழையவை