விழுப்புரம் மாவட்டம் செஞ்சி காந்தி பஜாரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்து மக்கள் கட்சி நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் தமிழ்நாட்டில் பாதுகாப்பு குறைந்துள்ளது முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்படுகிறார், ஆசிரியர் பள்ளியிலேயே கத்தியால் குத்தப்படுகிறார், திராவிட அரசால் இந்துக்களுக்கு முக்கியத்துவம் இல்லை மேலும் மத்திய அரசு பல திட்டங்களை மக்கள் லஞ்சம் கொடுக்காமல் பயன் பெரும் வகையில் இணையம் மூலம் கொண்டு வந்துள்ளது ஆகவே வருகின்ற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சரவணன், வெங்கடேசன், பாரதி, திருவண்ணாமலை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி செயலாளர் விஜராஜ், வல்லம் ஒன்றியத்திற்கு பிரிவு நிர்வாகிகள் அன்பழகன், கந்தன், சேட்டு, காசிநாதன், ஆறுமுகம், வல்லம் ஒன்றிய வடக்கு பிரிவு நிர்வாகிகள் அருள், சூர்யா, மேல்மலையனூர் ஒன்றிய நிர்வாகிகள் தசரதன், முருகன், ஏழுமலை, செஞ்சி நகர நிர்வாகிகள் ஜெயக்குமார், செந்தில், முருகன், கார்த்திகேயன், ஏழுமலை, மயிலம் ஒன்றிய நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, விஜயகுமார் மற்றும் பலர் கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக