செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் மஹா அன்னாபிஷேக விழா! ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்!!

 

செங்கல்பட்டு மாவட்டம் மேலைக்கோட்டையூரில் அமைந்துள்ள ஸ்ரீ மேகாம்பிகை சமேத மேகநாதேஸ்வரர் ஆலயம், தாம்பரம் தாலுகா செம்பாக்கம் குருசாமி நகரில் அமைந்துள்ள சிவாவிஷ்ணு உள்ளிட்ட சிவாலயங்களில் நேற்று மஹா அன்னாபிஷேக விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் மூலவர் மேகநாதேஸ்வரர், மற்றும் சிவபெருமானுக்கு அன்னம் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

தலைமை செய்தியாளர்: சந்திரசேகர்.

Post a Comment

புதியது பழையவை