சிங்கபுரீஸ்வரர், சுயம்பு பொய்யாமொழி விநாயகர், மத்தளேஸ்வரர் உள்ளிட்ட மாவட்டத்தில் அனைத்து சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா!

 

விழுப்புரம் மாவட்டத்தில் சிங்கபுரீஸ்வரர், சுயம்பு பொய்யாமொழி விநாயகர், மத்தளேஸ்வரர் உள்ளிட்ட அனைத்து சிவாலயங்களில் (நவ.15) வெள்ளியன்று ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சிங்கவரம்(சிங்கபுரம்) கிராம ஈசான்ய மூலையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சிங்கபுரீஸ்வார் ஆலயத்தில் ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிங்கபுரீஸ்வார் அமுது எனும் அன்ன சிறப்பு அலங்காரத்திலும், திண்டிவனம் அடுத்த தீவனூர் அருள்மிகு சுயம்பு பொய்யாமொழி விநாயகர் ஆலயத்தில் லிங்க வடிவிலான மூலவர் சுயம்பு பொய்யாமொழி விநாயகருக்கு பச்சரிசி அன்னம் சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் அனைவருக்கும் அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே நிகழ்வாக மேலச்சேரி கிராமத்தில் அமைந்துள்ள பல்லவர் காலக் குடைவரைக் கோவிலான பிரஹன்நாயகி சமேத மத்தளேஸ்வரர், செவளப்புரை கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த பிரஹன்நாயகி சமேத அகத்தீஸ்வரர், மேல்மலையனூர் அடுத்த வளத்தி கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த சுயம்பு சித்தீஸ்வரருக்கு சிறப்பு அன்ன அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை