விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி பகுதிகளில் தொடர் கனமழை பெய்துவருவதையொட்டி தந்திராயன்குப்பத்தில், கடல் சீற்றம் காரணமாக மீனவர்களின் மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில், வனத்துறை அமைச்சர் க. பொன்முடி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர்கள் விழுப்புரம் - இலட்சுமணன், விக்கிரவாண்டி - சிவா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ஜெயச்சந்திரன், கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் ஜெயமூர்த்தி உள்பட பலர் உடனிருந்தனர்.

Post a Comment

புதியது பழையவை