செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தாலுகா அகரம் கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட சமுதாய கூடத்தில் எல்.பி.ஜி இந்தியன் ஆயில், எல்.பி.ஜி எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பான முறையில் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இதில் கேஸ் சிலிண்டரை பொதுமக்கள் முறையாக பயன்படுத்துவது, கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டால் அதை எவ்வாறு விரைவாக சரி செய்வது, அவசர உதவிக்கு 1906 என்ற எண்ணுக்கு தகவல் தெறிவிக்க வேண்டும் என்பது பற்றி விளக்கம் அளித்தனர்.
மேலும், 10 கிலோ, 5 கிலோ, 2 கிலோ உள்ளிட்ட புதிய சிலிண்டர்கள் எவ்வாறு வாங்குவது, இந்த சிலிண்டர்கள் எந்தெந்த அலுவலகத்தில் கிடைக்கும் என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை இந்தியன் ஆயில் அதிகாரிகள் பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது இந்தியன் ஆயில் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதன் மூலம் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர். நிகழ்வில் இந்தியன் ஆயில் முக்கிய அதிகாரிகள் மற்றும் கேஸ் ஏஜன்சிகள் நிறுவனங்கள் கலந்து கொண்டனர்.
தலைமை செய்தியாளர்: சந்திரசேகர்.
கருத்துரையிடுக