விழுப்புரத்தில் குமரி திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா போட்டி! பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கிய ஆட்சியர்!!

 

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில், மாவட்ட நூலக ஆணைக்குழு சார்பில், கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் 133 அடி உயர திருவுருவச்சிலை 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு, நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு இன்று (31.12.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றிதழ்களை வழங்கினார். உடன் மாவட்ட நூலக அலுவலர் (பொ) மு. காசீம், மாவட்ட மைய நூலகர் ம. இளஞ்செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை