விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் குழந்தைகள் உரிமைக்கான மாணவர் மன்றம் மற்றும் செஞ்சி அதேகொம் பெண்கள் கண்ணிய மையம் இணைந்து நடத்தும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர 16 நாள் தொடர் பிரச்சாரம் - 2024 விழிப்புணர்வு பேரணியை செஞ்சி காவல் துணை கண்காணிப்பாளர் கார்த்திகா பிரியா கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழிப்புணர்வு பேரணி செஞ்சி பேரூராட்சி அலுவலகம் முன்பு தொடங்கி காந்தி பஜார் வீதி வழியாக நான்கு முனை சந்திப்ப, திண்டிவனம் சாலை வழியாக வட்டாட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், துண்டு பிரசுரம் வழங்கியும், பரை இசைத்தும், மனித சங்கிலி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
விழிப்புணர்வு பிரச்சாரத்தில் அதேகொம் நிறுவண நிர்வாகிகள், கல்லூரி முதல்வர், செவிலியர்கள், மாணவ மாணவிகள், பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர் இளம் பெண்கள் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக