மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து வாழ்த்து பெற்ற அரசு பள்ளி மாணவர்கள்!

 

விழுப்புரம் மாவட்டத்தில் மன்ற செயல்பாடுகள் போட்டிகளில் 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டில் மாநில அளவில் வெற்றி பெற்று தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டில் 23 டிசம்பர் 2024 அன்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுடன் சிங்கப்பூர் சுற்றுலா பயணம் செல்ல உள்ள சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி D.S. லித்திஷா, கழுப்பெரும்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் எஸ். பிரதீப் மற்றும் கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி கே. தீபிகா ஆகியோர் டிச. 21 அன்று விழுப்புரம் முதன்மைக்கல்வி அலுவலர் அறிவழகன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

நிகழ்வில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (இடைநிலை) பெருமாள், பள்ளி துணை ஆய்வாளர்கள் ராமதாஸ், வீரமணி, விநாயகமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.

Post a Comment

புதியது பழையவை