விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த அஞ்சாசேரி கிராமத்தில் செக்கோவர் நிறுவனம் சார்பில் கிராமத்தின் மலையடிவாரத்தின் ஆற்றங்கரையோரம் 25 குடும்பம் பழங்குடியின மக்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் உருவான ஃபெஞ்சல் புயலால் பெருவெள்ளம் ஏற்பட்டு 15 குடிசைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது மேலும் 10 குடிசைகள் சேதமடைந்தது இதனால் அவதியுற்ற மக்களுக்கு திங்களன்று (டிச.09) செக்கோவர் நிறுவன இயக்குனர் அம்பிகா சூசைராஜ் தலைமையிலும், புவியியல் மற்றும் சுரங்கத்துறை விழுப்புரம் மண்டலம் வருவாய் ஆய்வாளரும் சமூக சேவகர் கண்ணன், வள்ளலார் சொற்பொழிவாளர் ரமீஷா ஆகியோர் முன்னிலையில் அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் குழந்தைகளுக்கு பிஸ்கட்ஸ் போன்ற நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. நிவாரண உதவி பொருட்களை பெற்றுக் கொண்ட மக்கள் செக்கோவர் நிறுவனத்தை வெகுவாக பாராட்டினர்.
இந்நிகழ்வில் செக்கோவர் ஊழியர்கள் ரவீந்திரன், ராஜாராமன், அரவிந்தன், பிலிப், சக்திவேல், கோடீஸ்வரி, ஜெயஸ்ரீ, வாசவி, சங்கீதா, தன்னார்வலர்கள் தமிழ்ச்செல்வன், வெண்ணிலா ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் இளம் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் வளர்ச்சி திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயசீலன் செய்திருந்தார்.
விழுப்புரம் மாவட்ட செய்தியாளர்: தமிழ். மதியழகன்.
கருத்துரையிடுக